அதிர்ச்சி!!! 14 வயது மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பி; சொந்த பெற்றோர் செய்த அசிங்கமான செயல்..
சென்னை, மைலாப்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் சிறார் ஆபாச வீடியோக்களை தனது செல்போனில் வைத்திருப்பதாகவும், அதனை காசுக்காக விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் சம்மந்தப்பட்ட நபரை பிடித்து அவரது செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவரது செல்போனில், ஏராளமான சிறார்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, இது குறித்து போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் படி, அவர் தனது 14 வயது மகளையே பாலியல் தொழிலுக்கு அனுப்பி, அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் அவர், அந்த வீடியோக்களை பணத்திற்காக சமூக
வலைத்தளங்களில் விற்பனை செய்து வந்துள்ளார். ஆபாச வீடியோவில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவர்கள் யார்? சிறார் வீடியோக்களை பார்த்தவர்கள் யார்? போன்ற தகவல்களை போலீசார் சேகரிக்க தொடங்கியுள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இச்செயலுக்கு அவரது மனைவி உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளீட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சொந்த மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதியினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறார் வீடியோக்களை பார்த்தவர்கள், பகிர்ந்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள் அனைவரையும் கண்டறிந்து, கைது செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் மற்றும் ஐஐடி மாணவி பாலியல் சீண்டல் விவகாரம் உள்ள நிலையில், தற்போது இந்த விவகாரமும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.