நீங்க இந்த மாதிரி உடலுறவில் ஈடுபடுறீங்களா..? தொற்று நோய் பரவும் அபாயம்..!! இனி இதை ஃபாலோ பண்ணுங்க..!!
இளம் வயதினர் மத்தியில் பால்வினை தொற்றுகள் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இது குறித்து அவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், பால்வினை தொற்றுகள் உயிருக்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். அந்த வகையில், பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை பயன்படுத்தலாம். ஏனென்றால், ஆணுறை என்பது செக்ஸ் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கப்பட்ட பாதுகாப்பான வழிமுறை ஆகும்.
இருப்பினும், உடலுறவு கொள்ளும்போது பரவும் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் கவசம். சொறி சிரங்கு, கிளைமீடியா, கொனேரியா போன்ற தொற்றுநோய்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பால்வினை தொற்றுநோய்களில் மிகவும் ஆபத்தான நோயான எய்ட்ஸ் ஆகும். இது ஒருவரின் உயிரையும் பறித்துவிடும். இந்த நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை தராவிட்டால், மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தொற்று நோயில் இருந்து தப்பிக்க டிப்ஸ்..
* பால்வினை தொற்றுநோய் உங்களுக்கு இருந்தால், மருத்துவரை சந்தித்து முறையான ஆலோனை பெற வேண்டும். பின்னரே, உடலுறவில் ஈடுபட வேண்டும்.
* மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் சிகிச்சையை தொடர வேண்டும்.
* செக்ஸில் ஈடுபடும் முன் பார்ட்னருக்கு பால்வினை சார்ந்த நோய் இருக்கிறதா..? என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள் வேண்டும்.
* உடலுறவின்போது முடிந்தவறை ஆணுறை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* பால்வினை சார்ந்து உங்கள் பார்ட்னர் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளாரா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.