For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெற்றோர்களே உஷார்..!! பிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு..!! ஆவடியில் சோகம்..!!

When the bridge was opened to eat snacks, the girl was suddenly electrocuted and fainted.
10:11 AM Aug 07, 2024 IST | Chella
பெற்றோர்களே உஷார்     பிரிட்ஜை திறந்தபோது மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு     ஆவடியில் சோகம்
Advertisement

மின் கோளாறு காரணமாக வீட்டில் உள்ள பொருட்களின் மீது மின்சாரம் பாய்ந்து அவ்வபோது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் செல்போன் சார்ஜ் வயரை கடித்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. மொபைல் போன் சார்ஜ் போட்ட பிறகு சுவிட்சை ஆப் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

இந்நிலையில் தான், மீண்டும் ஒரு சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் உள்ள நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம். இவர், மகளிர் சுய உதவி குழுவுக்கு லோன் வாங்கி தரும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா, இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகள் ரூபாவாதி (வயது 5), தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த சிறுமி, தனது சகோதரிகளோடு விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து, தின்பண்டம் சாப்பிடுவதற்காக பிரிட்ஜை திறந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிறுமி துடிதுடித்து மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுமி இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!! இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை..!!

Tags :
Advertisement