பெற்றோர்களே உஷார்..!! கேரட் சாப்பிட்ட 2 வயது குழந்தை திடீரென உயிரிழப்பு..!! தொண்டையில் சிக்கியதால் பெரும் சோகம்..!!
கேரட் துண்டு, தொண்டையில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் - பிரமிளா தம்பதிக்கு இரண்டு வயதில் லித்திஷா என்ற மகள் இருந்தது. லித்திஷாவை கொருக்குப்பேட்டையில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு தாய் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விளையாடிக்கொண்டு இருந்த லித்திஷா, சமைக்காத கேரட் துண்டை சாப்பிட்டுள்ளார். அப்போது கேரட், தொண்டையில் சிக்கிய நிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, பதறிப்போன உறவினர்கள், குழந்தையை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்டதும் பெற்றோர்கள் கதறி துடித்தனர். கேரட் துண்டு, தொண்டையில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தை உயிரிழந்த தகவல் குறித்து அறிந்ததும், கொருக்குப் பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.