விவசாயிகளே..!! ரூ.2,000 பணம் வேண்டுமா..? அப்படினா உடனே இந்த வேலையை முடிச்சிருங்க..!! கடைசி தேதி நெருங்கிருச்சு..!!
நாடு முழுவதும் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான தவணைத் தொகை ரூ.2,000 பிப்ரவரி மாதம் வரவு வைக்கப்பட உள்ள நிலையில், கேஒய்சி அப்டேட்டை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான நபர்களுக்குத்தான் பணம் போகிறதா..? என்பதை தெரிந்து கொள்ள இகேஒய்சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இகேஒய்சி அப்டேட்டை செய்யாதவர்களுக்கு பணம் கிடையாது. எனவே, இந்த வேலையை விவசாயிகள் உடனே செய்துமுடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டினை பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இகேஒய்சி சரிபார்ப்பது எப்படி..?
* பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் சென்று பயனாளியின் நிலை என்பதை கிளிக் செய்து ஆதார் எண் அல்லது கணக்கு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
* பிறகு தரவைப் பெறு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
* அதில், பயனாளியின் நிலையை சரிபார்த்து கட்டண நிலையை சரிபார்க்க வேண்டும்.
* விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்கள் நிலை என்னவென்று காண்பிக்கப்படும்.
* இகேஒய்சி அப்டேட்டை சரிபார்ப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
Read More : பிஎம் கிசான் பயனாளிகளே!. டிஜிட்டல் விவசாயி அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம்!. மத்திய அரசு அதிரடி!