முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெற்றோர்களே அலர்ட்…! கட்டாயம் உங்க குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch சொல்லிக் கொடுங்க..! எப்படி தெரியுமா?…

06:40 AM Apr 21, 2024 IST | Maha
Advertisement

உங்கள் குழந்தைக்கு குட் டச் மற்றும் பேட் டச் குறித்து சொல்லிக் கொடுப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

Advertisement

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் முக்கியமான ஒன்று என்றால் அது குழந்தைகளுக்கு நல்ல மற்றும் கெட்ட தொடுதல் (Good Touch, Bad Touch) பற்றி உங்கள் பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பது தான். இது அவர்களின் உரிமைகளைப் புரிந்துகொள்வதற்கும், கவனமாகவும், நம்பகமான நபர்களின் உதவியை பெறுவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. எனவே உங்கள் குழந்தைக்கு குட் டச் மற்றும் பேட் டச் குறித்து சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியமானதாகும்.

முதலில் உங்கள் பிள்ளைகள் எந்த தயக்குமும் பயமுமின்றி உங்களிடம் கேள்வி கேட்கவும், வெளிப்படையாக பேசவும் பாதுகாப்பான இடத்தை உருவாக்கவும். உங்கள் பிள்ளையின் வயதுக்கு ஏற்ற மொழியைப் பயன்படுத்தி அவர்களிடம் குட் டச், பேட் டச் குறித்த விவாதங்களைத் தொடங்குங்கள். இது வெளிப்படையான மனப்பான்மையை ஊக்குவிப்பதால்,குழந்தைகள் தங்களின் உணர்வுகளையும்,அனுபவங்களையும் பேசுவதற்கு உதவுகிறது.

குழந்தைகளிடம் மற்றவர்கள் தங்கள் உடல் பாகங்களை தொட வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். மற்ற நபர் தொடும் போது அது சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றால் அது யாராக இருந்தாலும், அவர்களை தொட வேண்டாம் என்று கூறுங்கள்.

குழந்தைகள் தங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், நம்பவும் உதவுங்கள். ஒரு விஷயம் சரியாக இல்லை என்பதை உணருவதையும் அதை நம்பவும் கற்றுக்கொடுங்கள். தங்களை சுற்றி உள்ள மக்கள் மற்றும் சூழ்நிலைகளைப் பற்றிய அவர்களின் உள்ளுணர்வை நம்பவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பாதுகாப்பான தொடுதல் எனில் அது வசதியாகவும் அன்பாகவும் உணரவைக்கும், குடும்பத்தின் அணைப்புகள் போன்றது என்பதை அவர்களுக்கு புரியவைக்கவும்.. அதே நேரம் பாதுகாப்பற்ற தொடுதலை அவர்கள் சங்கடமாக அல்லது பயமாக உணர வைக்கும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும்.

உங்கள் குழந்தையை யாராவது தகாத முறையில் தொட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக கூற வேண்டும். அவர்கள் தொடும் போது "NO" என்று கூறுவதும், விரைவாக வெளியேறுவதும், உடனடியாக பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும் என்பதையும் அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதனால், அவர்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்வதில் நம்பிக்கை வளரும் .

Tags :
good touch bad touch
Advertisement
Next Article