ஷாக்.. ஒரே வாரத்தில் 50 பேருக்கு மேல் வழுக்கை.. பீதியில் மகாராஷ்டிரா மக்கள்..!! என்ன காரணம்..?
முடி உதிர்வது எவ்வளவு பெரிய பிரச்சனை.. அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். சிலர் முடி உதிர்வுக்கு பயந்து மருத்துவமனைகளுக்கு ஓடிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் ஷாம்பு மற்றும் முடி எண்ணெய்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் பல்வேறு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுகிறார்கள். முற்றிலும் வழுக்கை உள்ளவர்கள் விக் அணிவது அல்லது முடி மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 3 கிராம மக்கள் கடுமையான முடி கொட்டும் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இத்தனைக்கும் தலைமுடி நன்கு அடர்த்தியாக உள்ளவர்களுக்கு கூட ஒரு வாரத்தில் வழுக்கையாக மாறிவிடுகிறது. இதனால் மூன்று கிராம மக்களுக்கு அச்சத்தில் உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள போர்கவா, கல்வாட், ஹிங்னா ஆகிய 3 கிராம மக்கள் கடந்த சில நாட்களாக தலைமுடி உதிர்வு பிரச்னையால் கடும் பீதியில் உள்ளனர். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனை மகாராஷ்டிர மருத்துவத் துறை உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களிலும் அதிகார்கள் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த அதிகப்படியான முடி உதிர்வு பிரச்சனைக்கான சரியான காரணம் விரைவில் கண்டறியப்படும். கிராமங்களில் உள்ள சுகாதார சீர்கேடு மற்றும் மாசுபட்ட தண்ணீரால் அவர்களின் முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இந்த 3 கிராமங்களில் உள்ள சுமார் 50 பேர் இந்த முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.
Read more ; இனி இந்த உணவுகளை குக்கரில் சமைக்க வேண்டாம்..!! ஏன் தெரியுமா..? இதில் இவ்வளவு ஆபத்து இருக்கா..?