'பாகிஸ்தான் பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்'; அது தன்னைத்தானே தின்று கொண்டிருக்கிறது!. ஜெய்சங்கர் கடும் தாக்கு!
Jaishankar: அண்டை நாடான பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற 19வது 'நானி ஏ பால்கிவாலா நினைவு சொற்பொழிவு' நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானின் தற்போதைய பிரச்சனைகளுக்கு பாகிஸ்தானே காரணம் என்று அவர் கூறினார். பாகிஸ்தான் எப்போதும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்து வருவதாகவும், இந்த புற்றுநோய் தற்போது அதன் சொந்த அரசியல் கட்டமைப்பையே தின்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளுடன் சிறப்பான நட்புறவையே நாம் விரும்புகிறோம். நாடு பிரிவினையை சந்தித்த பின், நல்ல அண்டை நாட்டை உருவாக்க முயற்சித்தோம். வெறும் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், பிரதிபலன் எதிர்பார்க்காமல் தாராளமாக உதவிகளையும் செய்து வருகிறோம். இதற்கு உதாரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளை நாம் கூறலாம். ஆனால், பாகிஸ்தான் இதில் விதிவிலக்காக உள்ளது. பாகிஸ்தான் உடனான உறவு மோசமடைந்ததற்கு நாம் காரணம் அல்ல. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அது தொடர்ந்து ஆதரித்து வருகிறது. அது உருவாக்கிய அந்த புற்றுநோய், தற்போது அந்த நாட்டையே பாதிக்க வைத்துள்ளது.
Readmore: நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் தானேவில் கைது!. மும்பை போலீசார் அதிரடி!