ஆப்கான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்!. 15 பேர் பலி!. பதிலடி கொடுக்கப்படும்!. தலிபான் சபதம்!
Pakistan airstrikes: ஆப்கானிஸ்தானை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில் பதிலடி கொடுக்கப்படும் என்று தலிபான்கள் சபதம் எடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட காமா பிரஸ், பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு லாமன் உட்பட ஏழு கிராமங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டதாக காமா பிரஸ் தெரிவித்துள்ளது.
பர்மாலில் உள்ள முர்க் பஜார் கிராமம் அழிக்கப்பட்டதாக சில ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன, இது மனிதாபிமான நெருக்கடியை அதிகப்படுத்துகிறது. நள்ளிரவில் ஆப்கானிதான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித்தாக்குதலால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் - ஹமாஸ், ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகள் சண்டையிட்டு வரும் வேளையில் நேற்றைய பாகிஸ்தான் தாக்குதல் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று ஆப்கான் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதல் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.