சிரியா முன்னாள் அதிபரின் மனைவி புற்றுநோயால் பாதிப்பு.. உயிர் பிழைக்க 50% மட்டுமே வாய்ப்பு..!!
வெளியேற்றப்பட்ட சிரியத் தலைவர் பஷார் அசாத்தின் மனைவி அஸ்மா அசாத், லுகேமியா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உயிர் பிழைக்கும் வாய்ப்பு 50\50 வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய ஆயுதக் குழுவின் தலைமையிலான கிளர்ச்சிப் படை, சமீபத்திய தீவிர தாக்குதல் மற்றும் அரசுப் பிடியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியதன் வாயிலாக அவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவுரை எழுதியது.
அதிபர் பஷார் அசாத் ஆட்சி அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரின் மனைவியான அஸ்மா அல்-அசாத், ரஷ்யாவில் தனது கணவன் அசாத் உடன் தொடங்கியுள்ள புதிய வாழ்க்கையில் அஸ்மா அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தனது சொந்த மண்ணுக்கு [லண்டனுக்கு] திரும்ப விரும்புவதாகவும் தகவல் வெளியானது. அதன்படி அஸ்மா, ரஷ்யாவைவிட்டு வெளியேற சிறப்பு அனுமதிகோரி அந்நாட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளதார்.
இந்த நிலையில், அஸ்மா அசாத் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது, அவர் உயிர் பிழைப்பதற்கான 50/50 வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. பிரித்தானியாவில் பிறந்த இவர் முன்பு மார்பக புற்றுநோயுடன் போராடியவர். தற்போது, லுகேமியாவின் கடுமையான வடிவத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைப்பதற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மற்றவர்களைப் போல ஒரே அறையில் இருக்க முடியாது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அஸ்மா அசாத் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் ஒரு வருட சிகிச்சையைத் தொடர்ந்து 2019 இல் தன்னை புற்றுநோயற்றதாக அறிவித்தார். அவரது இரத்தப் புற்றுநோயானது ஒரு காலத்திற்குப் பிறகு மீண்டும் தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Read more ; தொப்பையை குறைக்க உதவும் 3 டிப்ஸ்.. ஆனந்த் அம்பானி ஃபிட்ன்ஸ் கோச் சொன்ன சீக்ரெட்…