இந்திய ரயில்வேயில் 2.94 லட்சம் காலிப்பணியிடங்கள்... மத்திய அரசு தகவல்...!
ரயில்வே துறையில் அரசிதழ் பதிவு பெறாத 1.39 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 2.37 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற கணினி அடிப்படையிலான இரண்டு பெரிய தேர்வுகள் அண்மையில் நடத்தப்பட்டன. 28.12.2020 முதல் 31.07.2021 வரை 7 கட்டங்களாக 211 நகரங்கள் மற்றும் 726 மையங்களில் 133 அமர்வுகளில் 15 மொழிகளில் இத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதே போல் 17.08.2022 முதல் 11.10.2022 வரை 5 கட்டங்களாக 1.11 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுடன் 191 நகரங்களில் 33 நாட்களில் 15 மொழிகளில் 551 மையங்களில் 99 அமர்வுகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 2023 செப்டம்பர் 30 வரை 2,94,115 காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களில் 90% க்கும் அதிகமானோர் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுப் பிரிவுகளில் உள்ளனர்.2014-15 முதல் 2023-24 வரையிலான காலகட்டத்தில் (செப்டம்பர் 23 வரை) 4,89,696 பேர். ரயில்வே ஆட்சேர்ப்பு முகமைகளால் பல்வேறு குரூப் சி பதவிகளுக்கு (நிலை -1 மற்றும் பாதுகாப்பு தொடர்பான பதவிகள் உட்பட) ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.