For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆசிரியர்களே... தினசரி அறிக்கையை SMS-ஆக காலை 11 மணிக்குள் அனுப்ப வேண்டும்...! பள்ளி கல்வித்துறை உத்தரவு...

06:50 AM Nov 17, 2023 IST | 1newsnationuser2
ஆசிரியர்களே    தினசரி அறிக்கையை sms ஆக காலை 11 மணிக்குள் அனுப்ப வேண்டும்     பள்ளி கல்வித்துறை உத்தரவு
Advertisement

சத்துணவு தினசரி அறிக்கையை குறுஞ்செய்தியாக காலை 11 மணிக்குள் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி கண்காணிப்பு அமைப்பு ( Automated Monitoring System ) என்ற AMS அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் SMS மூலம் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு செய்தி தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

Advertisement

சமூக நலத்துறை ஆணையரின் நேர்முகக் கடிதத்தில் , மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்யும் போது , பல பள்ளிகளில் AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை தலைமையாசிரியர்களால் குறுஞ்செய்தி மூலம் மாவட்ட சமூக நலத்துறைக்கு பெறப்படவில்லை என புகார் வந்துள்ளது. எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை SMS செய்தியினை காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement