இனி 1 முதல் 10-ம் வகுப்பு வரை... மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவு...!
சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளன்று மத்திய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; குழந்தைகள் மையங்களில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது குழந்தைகள் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு, டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கவும், குழந்தைகள் மையங்கள்/சத்துணவு மையங்களில் பயனடைந்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றும் இதர பொருட்களை அங்கன்வாடிப் பணியாளர்கள்/சத்துணவு அமைப்பாளர்கள் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல் மட்டும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது என்றும், ஆனால், மதிய உணவு வழங்கப்படுவதில்லை என்றும் சமூகநல ஆணையர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாணவர்களுக்கு முழுமையாகமதிய உணவும் உட்கொள்ளும் வகையில், இனிப்புப் பொங்கலுடன் மதியஉணவும் சேர்த்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.