For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மெக்சிகோ வளைகுடா மலைகளின் பெயரை மாற்றி உத்தரவு!. அதிபர் டிரம்ப் அதிரடி!

Order to change the names of the Gulf of Mexico mountains!. President Trump takes action!
08:48 AM Jan 25, 2025 IST | Kokila
மெக்சிகோ வளைகுடா மலைகளின் பெயரை மாற்றி உத்தரவு   அதிபர் டிரம்ப் அதிரடி
Advertisement

Trump: மெக்சிகோ வளைகுடா மற்றும் டெனாலி மலையின் பெயர்களை மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 20ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, முதலே அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, அகதிகள் குடியேற்றத்தையும், வெளிநாடு வாழ் மக்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதையும் அதிரடியாக நிறுத்தி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, மெக்சிகோ வளைகுடா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மிக உயரமான மலையான டெனாலியின் பெயர்களை மாற்றுவதாகவும் அறிவித்தார். அதன்படி, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்றும், டெனாலி மலையின் பெயரை மவுன்ட் மெக்கின்லே என்றும் அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்து டிரம்ப் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னாள் அதிபர் வில்லியம் மெக்கின்லேவை கவுரவப்படுத்தும் விதமாக, அவரது பெயர் டெனாலி மலைக்கு சூட்டப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்கா உள்துறை அமைச்சகம் கூறுகையில், 'இந்தப் பெயர் மாற்றம் நடவடிக்கை அமெரிக்காவின் பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன், இந்த நாட்டின் நாயகர்கள் மற்றும் வரலாற்று சொத்துக்களை இளைய தலைமுறையினர் கொண்டாட வழிவகை செய்யும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: வெவ்வேறு மாதிரியான கட்டணம் வசூல்!. குற்றச்சாட்டுகளுக்கு OLA, Uber நிறுவனங்கள் மறுப்பு!.

Tags :
Advertisement