For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கேண்டீன்களுக்கு பறந்த உத்தரவு..!! இனி இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை..!!

11:43 AM Nov 14, 2023 IST | 1newsnationuser6
கேண்டீன்களுக்கு பறந்த உத்தரவு     இனி இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க     உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
Advertisement

அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் எலி உணவுகளை திண்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உணவு பாதுகாப்புதுறை சார்பில் தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளில் இருக்க கூடிய கேண்டீன்களில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

* கேண்டீன்கள் தொடர்ந்து முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* பூச்சிகள், விலங்குகள் அணுகும் வகையில், உணவகங்களுக்கு அருகில் இருக்க கூடிய துளைகள், சாக்கடைகள், மற்றும் கால்வாய்கள் போன்றவற்றை முழுமையாக மூட வேண்டும்.

* விலங்குகள், பறவைகள், செல்லப்பிராணிகள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

* பழுதான கட்டிடங்களை உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பூச்சிகள் மற்றும் விலங்குகள் அணுகாத அளவிற்கு கட்டிடத்தை பராமரிக்க வேண்டும்.

* அடைக்கபட்ட உணவு பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை மட்டுமே வசூலிப்பதுடன், காலாவதி காலத்திற்குள் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

* உணவுகளை கையாள்பவர்கள் கட்டாயம் கையுறை அணிவதுடன், தலை முடி உதிராமல் இருக்க தலையுறை அணிய வேண்டும்.

* உணவுகளை கையாள்பவர்கள் எப்போதும் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான நீரால் கழுவி கைகளை கிருமிநீக்கம் செய்ய வேண்டும்.

* உணவுகளை கையாள்பவர்கள் புகைபிடித்தல், எச்சில் துப்புதல், தும்முதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* உணவு பொருட்களை சேமித்து வைக்க கூடிய இடங்கள் உணவங்களில் இருந்து தனியாவும் Fssai விதிமுறைகளுக்கு ஏற்றவாறு பூச்சிகள் மற்றும் விலங்குகள் நெறுங்காத அறைகளில் சேமிக்க வேண்டும்.

Tags :
Advertisement