PM MODI: பீகார் இமாச்சலப் பிரதேசத்தில் மோடி அலை… அதிர்ச்சியில் இந்தியா கூட்டணி.! வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.!
PM MODI: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) பீகார் மாநிலத்தில் 35 தொகுதிகளிலும் இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது
2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சிஎன்ஓஎக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வட இந்தியாவில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அறிவித்துள்ளது.
பீகாரில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 35 இடங்களில் வெற்றி பெறும் என்றும், இமாச்சலப் பிரதேசத்தில் இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்றும் இந்தியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
CNOX கருத்துக்கணிப்பு விவரம் இன்று செய்தி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. பீகாரில் எதிர்க்கட்சியான ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணி 5 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெறலாம் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில், NDA 39 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. RJD ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
தற்போது வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 17 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. இவை தவிர என்டிஏ கூட்டணியின் மற்ற கட்சிகள் ஆறு இடங்களில் வெற்றி பெறும் என தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஐந்து இடங்களில் வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அவற்றில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 4 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெறும் இன்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 52% வாக்குகளை பெறும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா கூட்டணி 34% வாக்குகளை பெறும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. முயற்சிகள் மற்றும் பிற கட்சிகள் 14% வாக்குகள் பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
பீகாரின் வடக்கு பகுதிகளில் இருக்கும் 12 தொகுதிகளில் இந்திய கூட்டணி 11 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. இங்கு இந்தியா கூட்டணி 1 தொகுதியில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கிறது.
9 இடங்களைக் கொண்ட மிதிலாஞ்சல் பிராந்தியத்தில், என்டிஏ 8 இடங்களையும், இந்தியா கூட்டணி 1 இடத்தையும் வெல்லலாம். மேலும் இருக்கை. 7 இடங்களைக் கொண்ட சீமாஞ்சல் பிராந்தியத்தில் NDA 5 இடங்களையும், இந்தியா 2 இடங்களையும் வெல்லலாம் எனவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
12 இடங்களைக் கொண்ட மகத்-போஜ்பூர் பிராந்தியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 11 இடங்களை வெல்லலாம், மீதமுள்ள 1 தொகுதியை இந்தியா கூட்டணி வெல்லலாம் என்று கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் நான்கு பாராளுமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என சி.என்.ஓ.எக்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 58.72% வாக்குகள் பெறும். மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 33.18% வாக்குகள் பெறும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.