For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடரும் தாக்குதல்!. ராணுவ தளத்தின்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு!. 3 ராணுவ வீரர்கள் காயம்!

Terrorists open fire at Army base in Jammu and Kashmir's Doda, one soldier injured
07:54 AM Jun 12, 2024 IST | Kokila
தொடரும் தாக்குதல்   ராணுவ தளத்தின்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு   3 ராணுவ வீரர்கள் காயம்
Advertisement

Terrorist Attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள ராணுவ தளத்தின்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் நேற்று இரவு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தீவிரவாத தாக்குதலில் கிராம மக்கள் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இருப்பினும் தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களை பிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஹிராநகர் பகுதியில் விமானங்கள் மூலம் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் உள்ள படேர்வா பானி சாலையில் உள்ள சட்டர்கல்லா பகுதியில் உள்ள ராணுவத்தின் தற்காலிக செயல்பாட்டு தளத்தின் (TOB) மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் மேலும், பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் பதற்றம் நிலவிவருகிறது.

கதுவாவில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களில் நடந்த மூன்றாவது பயங்கரவாதச் சம்பவம் இதுவாகும். படுகாயமடைந்த ராணுவ வீரர் பாதர்வா துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், கதுவாவில் சுட்டுக் கொல்லப்பட்டவர் பாகிஸ்தான் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Readmore: நாட்டின் 30-வது ராணுவ தளபதி நியமனம்!. உபேந்திர திவேதி வரும் 30ம் தேதி பதவியேற்கிறார்!

Tags :
Advertisement