முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டிச.31 வரைதான் கெடு..!! இந்த வேலையை உடனே முடிச்சிருங்க..!! ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய உத்தரவு..!!

12:15 PM Dec 05, 2023 IST | 1newsnationuser3
Advertisement

ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக தங்களுடைய ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தவிட்டுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் அவர்களுடைய ரேஷன் கார்டு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காகவே அரசு தரப்பிலிருந்து ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசின் உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கிடைக்கிறது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. ஒருவேளை நீங்கள் இன்னும் ஆதார் கார்டில் eKYC சரிப்பார்ப்பை முடிக்கவில்லை என்றால், விரைவில் அதைச் செய்துவிடுவது நல்லது. அதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். ஆதார் சரிபார்ப்பை முடிக்காத பயனாளிகளின் பெயர் அரசின் ரேஷன் பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்படும். அவ்வாறு நீக்கப்பட்டால் அரசின் ரேஷன் உதவிகளைப் பெறமுடியாது. அது நடந்தால் புத்தாண்டு முதல் நீங்கள் ரேஷன் வாங்க முடியாமல் போகலாம்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு e-KYC சரிபார்ப்பு செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் பலர் அதைச் செய்யாமல் விட்டதால் கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேச மாநில ரேஷன் கார்டு பயனாளிகள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் ரேஷன் உதவிகளைப் பெறமுடியாது என்று அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிப்பதில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் சோலன் மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து பிலாஸ்பூர் மற்றும் ஹமிர்பூர் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013இன் கீழ் பொது விநியோக அமைப்பின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆதார் எண் மற்றும் eKYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்பதை பீகார் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இதன் கடைசி தேதி டிசம்பர் 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்காத அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும். ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் அவர்கள் ரேஷன் உதவிகளை இழக்க நேரிடும். இதற்காக, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் இத்தகவலை பரப்பும்படி மாநில அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குள் ஆதாரை இணைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சமீபத்தில் மத்திய மோடி அரசு இலவச ரேஷன் வழங்கும் கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவித்தது. இதன் மூலம் 80 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைவார்கள். 2024 ஜனவரி 1 முதல் உயர்த்தப்பட்ட இந்த வரம்பின் பலனை 2029ஆம் ஆண்டு வரை பெறலாம். இந்த அறிவிப்பால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
ration cardstill Dec 31டிச.31 வரைதான் கெடுரத்து செய்ய உத்தரவு
Advertisement
Next Article