18 - 30 வயது இளைஞர்களுக்கு மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு...! உடனே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்
யுவ சங்கம் (ஐந்தாம் கட்டம்) தேர்வுக்கான ஆன்லைன் பதிவை மத்திய அரசு தொடங்கி உள்ளது. எதற்காக இந்தத் திட்டம் என்பதையும் பார்க்கலாம்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் (EBSB) திட்டத்தின் கீழ் யுவ சங்கத்தின் ஐந்தாம் கட்டத்திற்கான பதிவு இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சகம் இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே, மக்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதற்காக, மத்திய அரசின் முன்முயற்சியே யுவ சங்கம் ஆகும். 18-30 வயதுக்குட்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்கள், முக்கியமாக மாணவர்கள், என்எஸ்எஸ், நேரு இளைஞர் மன்ற தன்னார்வலர்கள், பணி புரிவோர், சுயதொழில் செய்பவர்கள் போன்றவர்கள், 2023-ல் தொடங்கப்பட்ட இந்த தனித்துவமான முயற்சியின் வரவிருக்கும் கட்டத்தில் பங்கேற்க, யுவ சங்கம் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். 2024 அக்டோபர் 21 வரை பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
விரிவான தகவல்களுக்கு httpsebsb.aicte-india.org இணையதளத்தைக் காணவும். சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு 2015 அக்டோபர் 31 அன்று நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில், பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு இடையே, நீடித்த மற்றும் கட்டமைக்கப்பட்ட கலாச்சார இணைப்பு குறித்த யோசனையை, பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார். இந்த யோசனையை செயல்படுத்த, ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கம் 2016 அக்டோபர் 31 அன்று தொடங்கப்பட்டது. ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கத்தின் தோற்றம், பரிணாமம் மற்றும் இயக்கம் குறித்த தகவல்கள் மின்-புத்தகத்தில் (httpsekbharat.gov.inJourneySoFarCampaignindex.html) கிடைக்கின்றன.
ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட யுவ சங்கம், பஞ்ச பிரானின் இரட்டை அம்சங்களான ஒற்றுமையில் வலிமை மற்றும் பாரம்பரியத்தில் பெருமிதம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறது. இந்த முயற்சி, அனுபவ கற்றல் மற்றும் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை பற்றிய அறிவாற்றலில் கவனம் செலுத்துவதன் மூலம், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் சாராம்சத்துடன் ஒத்துப் போகிறது. இது அதன் மையத்தில் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் ஒரு தொடர்ச்சியான கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றமாகும், இதில் பங்கேற்பாளர்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், இயற்கை நிலத்தோற்றங்கள், வளர்ச்சி அடையாளங்கள், பொறியியல் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள், சமீபத்திய சாதனைகள் மற்றும் புரவலர் மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் உள்ள உள்ளூர் இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், ஆழமாக ஈடுபடுவதற்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
இதற்கான பட்டியலின்படி தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள என்ஐடிடிடிஆர் எனப்படும் தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் யுவ சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் உயர்கல்வி நிறுவனமாக செயல்படும்.