ஆன்லைன் செயலி மூலம் கடன்….. மனைவியின் புகைப்படம் ஆபாசமாக வந்ததால்… நபர் விபரீத முடிவு….
சென்னையில் ஆன்லைனில் கடன் வாங்கியதால் ஆபாசமாக புகைப்படம் வந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடியை சேர்ந்த சத்யநாராயணன் மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் சத்யநாராயணன், செல்போன் செயலி மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால் அந்த கடனை இவர் திருப்பி செலுத்தாததால் அவருடைய செல்போனுக்கு பல்வேறு குறுந்தகவல்கள் வந்ததுடன் மர்ம நபர்கள் சிலர் பணத்தை திருப்பி செலுத்துமாறு கூறி மிரட்டியதாக கூறப்படுகிது.
அதுமட்டுமில்லாமல், அவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போன்றும், அவருடைய தாயாரை ஆபாசமாக சித்தரித்தும் புகைப்படத்தை அவருடைய எண்ணிற்கு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதோடு மட்டும் விடாமல், சத்தியநாராயணனின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து அந்த புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளனர். இதனால், மனமுடைந்த சத்தியநாராயணன் வீட்டில் பூச்சி மருந்து எடுத்து குடித்து விபரீத முடிவை எடுத்துள்ளார். இதனையாரிந்த, உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
read more... பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு உயிரிழந்த அமெரிக்க பிரபலம்..!! சோகத்தில் ரசிகர்கள்