For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரு கிலோ வெங்காயம் 130 ரூபாயா.? இப்படியே போனால் என்ன ஆகும்.. இல்லத்தரசிகள் கவலை..!!

Onion prices have increased in Koyambedu vegetable market in Chennai due to reduced supply.
01:21 PM Nov 08, 2024 IST | Mari Thangam
ஒரு கிலோ வெங்காயம் 130 ரூபாயா    இப்படியே போனால் என்ன ஆகும்   இல்லத்தரசிகள் கவலை
Advertisement

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகளின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது. அந்த வகையில் தங்காளி மற்றும் வெங்காயத்தின் திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கடும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக ஒரு கிலோ தக்காளி விலையானது கடந்த வாரம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலையானது 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டன. அந்த வகையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கும், வெங்காயம் 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விதிகப்பட்ட தடை நீக்கப்பட்டதால் உள்ளூர் சந்தையில் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் வெங்காய அறுவடை காலம் முடிந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் கிலோ ரூ.100க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனையில் வெங்காயம் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி சுமார் 60 வாகனங்களில் 1,300 டன் நாசிக் வெங்காயம் வருவது வாடிக்கையாகும். ஆனால், இன்று 500 டன் மட்டுமே வந்திருக்கிறதாம். அதனால்தான் விலை உயர்ந்துள்ளதாகவும், வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என்றும் வியாபாரிகள் கூறுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த வெங்காயத்தின் விலையானது இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இப்படியே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Read more ; நிலவுக்கு மிக அருகில் இருக்கும் நாடு எது தெரியுமா..? இங்கு அரிய வகை விலங்குகளும் இருக்கிறதாம்..!!

Tags :
Advertisement