ஒரே வாரம் போதும்..!! பாத வெடிப்பு முழுமையாக குணமாக சூப்பர் டிப்ஸ்..!! செம ரிசல்ட்..!!
அதிகப்படியான வெயில், கால்களில் படும்போது, கால்கள் வறண்டு விடுகிறது. கால்களில் உள்ள எண்ணெய் பசையையும் வெயில் உறிஞ்சிவிடுவதோடு, கால்களும் மென்மையை இழந்துவிடுகிறது. சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை. இதனால், பாத வெடிப்புகள் வரும். அதைப் போக்க உதவும் சில எளிய வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
கடுகு எண்ணெய்
இரவு தூங்கும் போது, கடுகு எண்ணெய்யை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யலாம். இப்படி செய்யும்போது பாத வெடிப்பு பிரச்சனை சரியாகும்.
தேன் மற்றும் சுண்ணாம்பு
தேன் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு குழைத்து கொள்ள வேண்டும். பின்பு இந்த கலவையை இரவு தூங்கும் போது கால்களில் போட்டு வந்தால் பாத வெடிப்புகள் சரியாகும்.
எலுமிச்சை பழத் தோல்
எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவிக் கொள்ள வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கும். மேலும் கிருமிகளும் ஒழியும்.
சொரசொரப்பான கற்கள்
தினமும் குளிக்கையில், சொரசொரப்பான கற்களில் உங்கள் கால்களை தேய்த்தாலும் பாதத்தில் உள்ள வெடிப்புகள் மறைந்து போகும்.
உருளைக்கிழங்கு
உருளைக் கிழங்கை காய வைத்து தூளாக்கிப் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும் வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மிளிரும்.
தேங்காய் எண்ணெய்
தினமும் இரவு தூங்கும் போது கால்களில் தேங்காய் எண்ணெய்யை தடவி வந்தால் கால்களில் உள்ள வெடிப்புகள் சரியாகிவிடும்.
வேப்பிலை மற்றும் மஞ்சள்
சிறிதளவு வேப்பிலை, சிறிதளவு மருதாணி மற்றும் சிறிதளவு பச்சை மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பாத வெடிப்பு இடத்தில் போட்டு வர பாத வெடிப்புகள் சரியாகும்.