For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒருமுறை முதலீடு..!! மாதம் ரூ.5,550 கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

11:30 AM May 04, 2024 IST | Chella
ஒருமுறை முதலீடு     மாதம் ரூ 5 550 கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்     மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

பணி ஓய்வு பெற்ற பிறகும் மாத வருமானம் பெற நினைக்கும் நபர்களுக்காகவே தபால் நிலையங்களில் திட்டம் இருக்கிறது. இதுபற்றிய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

நம்மில் பலர் சந்தையுடன் தொடர்புடைய சேமிப்பு திட்டங்கள் அதிக ரிட்டன்களை அளித்தாலும், குறைவான ரிட்டன்களை வழங்கும் நிலையான வருமான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறோம். பலர் தங்களது முதலீடுகளில் இருந்து வழக்கமான மாத வருமானம் பெறுவதற்கே ஆசைப்படுகின்றனர். இது அவர்களுடைய மாத செலவுகளை சமாளிப்பதற்கும் பிறரை நம்பி இருப்பதற்கான தேவையை குறைப்பதற்கும் உதவுகிறது.

இது போன்ற நபர்களுக்கு தபால் நிலையம் மாதாந்திர வருமான திட்டம் (Monthly Income Scheme - MIS) என்று சொல்லப்படும் திட்டத்தை கொண்டுள்ளது. இதில் உங்களது பணத்தை ஒருமுறை நீங்கள் டெபாசிட் செய்து விட்டால் அதிலிருந்து மாதா மாதம் நிலையான வருமானம் உங்களுக்கு வரும். இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய முதலீட்டின் அடிப்படையில் நீங்கள் பெரும் மாத வருமானம் வேறுபடும். இத்திட்டத்தில் ஒருவர் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்து 5 வருடங்களுக்கு மாத வருமானமாக ரூ.5,550 பெறலாம்.

தபால் நிலைய MIS கணக்கீடு :

முதலீடு : ரூ.9 லட்சம்

ஆண்டு வட்டி விகிதம் : 7.4%

கால அளவு : 5 ஆண்டுகள்

வட்டி மூலமாக பெரும் வருமானம் : ரூ.3,33,000

மாத வருமானம் : ரூ.5,550

இந்த திட்டம் ஜாயிண்ட் அக்கவுண்ட் வசதியையும் வழங்குவதால் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒருவேளை நீங்கள் விருப்பப்பட்டால், உங்களுடைய முதலீட்டு தொகை 5 வருடம் மெச்சூரிட்டி காலத்திற்குப் பிறகு உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். இத்திட்டத்தில் பெறக்கூடிய வட்டி, ஒவ்வொரு மாதமும் உங்களுடைய தபால் நிலைய சேமிப்பு கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.

தபால் நிலைய MIS 2024: முன்கூட்டியே அக்கவுண்ட்டை மூடுவதற்கான விதிகள்

தபால் நிலைய மாத வருமான அக்கவுண்ட்டை மெச்சூரிட்டிக்கு முன்பு நீங்கள் மூட விரும்பினால், அதனை நீங்கள் அக்கவுண்ட் திறந்த ஒரு வருடம் கழித்து செய்யலாம். இருப்பினும், அவ்வாறு நீங்கள் செய்யும் பட்சத்தில் அதற்கான அபராத தொகையை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். 1 முதல் 3 வருடங்களுக்கு உள்ளாக பணத்தை வித்ட்ரா செய்தால் டெபாசிட் தொகையில் இருந்து 2 சதவீதம் கழிக்கப்பட்டு மீதம் இருக்கக்கூடிய பணம் மட்டுமே உங்களுக்கு திருப்பி வழங்கப்படும்.

Read More : சவுக்கு சங்கரை கொலை செய்ய திட்டம்..? வேண்டுமென்றே செஞ்சா மாதிரி இருக்கு..!! அதிமுக சந்தேகம்..!!

Advertisement