வட்டியே ரூ.3,33,000 கிடைக்கும்..!! இந்த திட்டம் பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
பணி ஓய்வு பெற்ற பிறகும் மாத வருமானம் பெற நினைக்கும் நபர்களுக்காகவே தபால் நிலையங்களில் திட்டம் இருக்கிறது. இதுபற்றிய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நம்மில் பலர் சந்தையுடன் தொடர்புடைய சேமிப்பு திட்டங்கள் அதிக ரிட்டன்களை அளித்தாலும், குறைவான ரிட்டன்களை வழங்கும் நிலையான வருமான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறோம். தங்களது முதலீடுகளில் இருந்து வழக்கமான மாத வருமானம் பெறுவதற்கே ஆசைப்படுகின்றனர். இது அவர்களுடைய மாத செலவுகளை சமாளிக்க பிறரை நம்பி இருப்பதற்கான தேவையை குறைப்பதற்கும் உதவுகிறது.
இது போன்ற நபர்களுக்கு தபால் நிலையம் மாதாந்திர வருமான திட்டம் (Monthly Income Scheme – MIS) என்று சொல்லப்படும் திட்டத்தை கொண்டுள்ளது. இதில் பணத்தை ஒருமுறை நீங்கள் டெபாசிட் செய்து விட்டால், அதிலிருந்து மாதந்தோறும் நிலையான வருமானம் வரும். இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய முதலீட்டின் அடிப்படையில் நீங்கள் பெரும் மாத வருமானம் வேறுபடும். இத்திட்டத்தில் ஒருவர் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்து 5 வருடங்களுக்கு மாத வருமானமாக ரூ.5,550 பெறலாம்.
தபால் நிலைய MIS கணக்கீடு :
முதலீடு : ரூ.9 லட்சம்
ஆண்டு வட்டி விகிதம் : 7.4%
கால அளவு : 5 ஆண்டுகள்
வட்டி மூலமாக பெரும் வருமானம் : ரூ.3,33,000
மாத வருமானம் : ரூ.5,550
இத்திட்டம் ஜாயிண்ட் அக்கவுண்ட் வசதியையும் வழங்குவதால், முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒருவேளை நீங்கள் விருப்பப்பட்டால், உங்களுடைய முதலீட்டு தொகை 5 வருடம் மெச்சூரிட்டி காலத்திற்குப் பிறகு உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். இத்திட்டத்தில் பெறக்கூடிய வட்டி, ஒவ்வொரு மாதமும் உங்களுடைய தபால் நிலைய சேமிப்பு கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.
Read More : 2-வது திருமணத்திற்கு தயாரான விஜய் டிவி பிரியங்கா..? மாப்பிள்ளை யார் தெரியுமா..?