நீளும் பட்டியல்... ஆம்ஸ்ட்ராங் வழக்கில் மேலும் ஒரு பாஜக நிர்வாகியிடம் விசாரணை...!
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தமிழ்நாடு பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷிடம் போலீஸ் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து இதுவரை 16 பேரை கைது செய்தனர். இணை ஆணையா் விஜயகுமாா் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா். குற்றவாளிகள் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொலைக்கான மூல காரணம், மூளையாக செயல்பட்டவர், பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மொத்த குழுக்கள், அதில் உள்ளவர்கள் என அனைத்து தகவல்களையும் முழுமையாக சேகரிக்கும் வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தமிழ்நாடு பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷிடம் போலீஸ் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டில் பெண்ணிடம் இருந்து ரூ.45 லட்சத்தை பறித்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மின்ட் ரமேஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.