முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எந்தெந்த நாட்களில் எப்படி விரதம் இருக்க வேண்டும்..? ஒவ்வொரு நாளுக்கும் பலன் உண்டு..!! இனி இப்படி பண்ணுங்க..!!

We can obtain great benefits by fasting and worshipping God on the appropriate days according to our karmic deeds.
05:00 AM Dec 06, 2024 IST | Chella
Advertisement

கடவுளை வழிபட வாரத்தில் அனைத்து நாட்களுமே உகந்தவை தான். இருப்பினும், நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப அதற்குரிய நாள் கிழமைகளை விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்திட சிறப்பான பலன்களை பெற முடியும். அந்த வகையில், எந்த கிழமையில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மாதம் முழுவதும் கடைப்பிடிக்கும் ஒரு வகையான சந்திராம்ச விரத முறையும் உண்டு. அதாவது சந்திரனின் பிறை வளர்வதற்கு ஏற்ப உணவின் அளவை முறைப்படுத்தி விரதம் இருப்பதற்கு சந்திராம்ச விரதமுறை. இதில் அமாவாசை அன்று முழு நாளும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.

Advertisement

அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து படிப்படியாக உணவின் அளவை அதிகரித்து பௌர்ணமியில் முழு உணவாக உண்பது தான் விரதமுறை. பின்னர், படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்து அமாவாசையன்று முழுவிரத தினமாக அமையும். ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதால் நீண்ட கால நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வை பெற முடியும்.

திங்கட்கிழமைகளில் இருக்கும் விரதத்தினால் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும். புதன்கிழமைகளில் விரதம் இருப்பதால் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும். வியாழக்கிழமை விரதம் இருப்பதால் குழந்தைப் பேறு சந்தான பாக்கியம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் தம்பதியர்கள் ஆதர்சத்துடன் திகழ்வதுடன் அவர்களின் ஆயுள்பலம் கூடும். சனிக்கிழமை விரதம் இருப்பதால் வேலை, தொழில் விருத்தி அடைந்து செல்வம் பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை ஆகும்.

Read More : வீட்டிலுள்ள பொருட்களே போதும்..!! உங்கள் உதடுகளை மென்மையாக மாற்ற சூப்பர் டிப்ஸ்..!!

Tags :
அமாவாசைகடவுள்கடவுள் வழிபாடுசெல்வம்பௌர்ணமிவிரதமுறை
Advertisement
Next Article