பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? கவலையே வேண்டாம்.. 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! - முழு விவரம் உள்ளே
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 14 ஆயிரத்து 104 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14,15 மற்றும் 16ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பாக கூடுதலாக ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில், சொந்த கிராமங்களில் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.
அதன் படி, ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்ட நிலையில் அரசு பேருந்துகளை நம்பி பொதுமக்கள் உள்ளனர். அந்த வகையில் பொங்கல் சிறப்பு பேருந்து குறித்து அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆலோசனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- முதல்வர் வழிகாட்டுதல்படி இன்று ஆலோசனை நடைபெற்றது. வரும் 10 ம் தேதி முதல் 13 வரை இயக்கப்படுகிறது. தினசரி பேருந்துகள் உடன் 14 ஆயிரம் பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கம். பண்டிகை முடிந்து சென்னை திரும்ப 15 முதல் 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
1 லட்சத்து 73 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக 22 ஆயிரத்து 676 பேருந்துகள் ஒட்டு மொத்தமாக இயக்க திட்டமிட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் பகுதியில் பயணிகளை நிறுத்தி ஏற்றும்போது நெரிசல் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாருடன் இரண்டு நாட்களில் ஆலோசனை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Read more ; இந்தியாவில் பரவியது HMPV வைரஸ்.. பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு பாசிட்டிவ்..!! – ICMR உறுதி