முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழகமே..! தீபாவளியை முன்னிட்டு... இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்..! அரசு அசத்தல் அறிவிப்பு...

On the occasion of Diwali... ration shops will also be open today
05:49 AM Oct 27, 2024 IST | Vignesh
Advertisement

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அனைத்து நியாயவிலைக் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகம் முழுவதும் செயல்படும் 24,610 முழு நேர நியாயவிலைக் கடைகள், 10,164 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 34,774 நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையில், அனைத்து முழுநேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகளும் இன்று முழுவதுமாக வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தீபாவளி 31.10.2024 அன்று கொண்டாடப்படுவதாலும், அன்றைய தினம் மாத இறுதி நாளாக இருப்பதாலும் அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் இன்று செயல்படும். ஆதலால் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை இன்றும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு ஈடாக 16.11.2024 சனிக்கிழமை அன்று பொது விநியோகத் திட்ட கடைகளுக்கு விடுமுறை நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiDiwaliration cardRation shotn governmentதமிழ்நாடுதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article