கூத்தாடி என்ற கூற்றை சுக்குநூறாக உடைத்தவர் MGR..!! - தவெக விஜய் புகழாரம்
தமிழகத்தில் விஜய்யின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, விழுப்புரம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பின. திமுக, பாஜக எதிர்ப்பை நேரடியாக கையில் எடுத்துள்ள விஜய், மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், எம்ஜிஆரின் 108ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை பயன்படுத்தி தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்' என தெரிவித்துள்ளார்.
Read more ; கோர விபத்து.. அடுத்தடுத்து மோதிய வாகனங்களால் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!