Alert...! 14-ம் தேதி சென்னையில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...!
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில், வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு வானிலை நிகழ்வு காரணமாக, அடுத்து வரும் ஒரு வார காலத்துக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 13-ம் தேதியும், 14ம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை ஒரு வார காலத்துக்கு மழை பெய்யும். வரும் அக்.14ம் தேதி, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும்12-ம் தேதி வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.