For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டீர்களா..? அப்படினா இனி மறக்காம இதை பண்ணுங்க..!!

Avoiding oily foods completely is the healthiest thing to do.
05:30 AM Sep 28, 2024 IST | Chella
எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டீர்களா    அப்படினா இனி மறக்காம இதை பண்ணுங்க
Advertisement

எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது தான் ஆரோக்கியமான விஷயம். எண்ணெய் உணவுகள் சாப்பிட்டதும் அவை சாச்சுரேட்டட் கொழுப்பாக மாறி, குடலின் உட்சுவர்களில் ஒட்டிக் கொள்ளும். முறையாக கழிவுகள் வெளியேறாது. ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இவற்றைத் தடுக்க கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

Advertisement

​க்ரீன் டீ (அ) இஞ்சி டீ

சிலருக்கு டீயுடன் சேர்த்து பஜ்ஜி, வடை, போன்ற பொரித்த உணவுகள் சாப்பிட பிடிக்கும். எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளுடன் பால் சேர்த்த டீ குடிப்பது அஜீரணத்தையும் வயிற்றுக் கோளாறுகளையும் உண்டாக்கும். அதனால் அசைவ உணவுகள் அல்லது எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பிறகு, பால் சேர்த்த டீ, காஃபிக்கு பதிலாக க்ரீன் டீ அல்லது இஞ்சி டீ ஆகியவற்றை குடிக்கலாம்.

நட்ஸ் மற்றும் விதைகள்

இது கேட்கவே புதிதாக இருக்கலாம். ஆனால், அசைவ உணவுகளோ அல்லது எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிட்ட பிறகு நட்ஸ் மற்றும் விதைகளைச் சாப்பிடுவது நல்லது. இவற்றில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் எண்ணெய் உணவுகளை எளிதாக உடைத்து கழிவுகளை வெளியேற்ற உதவும்.

​நார்ச்சத்து உணவுகள்

நிறைய நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது இயற்கையாகவே ஜீரண மண்டலத்துக்கு நல்லது. அதிலும், எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பிறகு நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது. குறிப்பாக பழங்கள் மற்றும் வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட சாலட் வகைகளை நிறைய சாப்பிடலாம். இது அந்த கொழுப்பு உணவுகளையம் சேர்த்து ஜீரணிக்க உதவும். குறிப்பாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

​ஓமம் தண்ணீர்

நம்முடைய முன்னோர்களுக்கு இந்த பழக்கம் இருந்தது. ஆனால், இப்போது நிறைய பேருக்கு ஓமம் என்றால் என்னவென்றே தெரிவதில்லை. இது ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. ஓமம் தண்ணீர் கடைகளில் கிடைக்கிறது. அல்லது வீட்டிலேயே ஒரு ஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, பின்பு ஆறவைத்து குடிக்கலாம். இதை குடித்தால் அசைவ உணவுகள் சாப்பிட்ட பிறகு ஏற்படும் வயிற்றுப் பொருமல், புளித்த ஏப்பம், வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல் ஆகியவை குறையும்.

​நடைப்பயிற்சி

காலை, மாலையில் நடைப்பயிற்சி செல்லும் பழக்கம் இருந்தாலும் கூட, அசைவ உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைச் சாப்பிட்ட பிறகு கொஞ்சம் நேரம் நடப்பது நல்லது. இப்படி உணவு உண்ட பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்தால் ஜீரணம் எளிதாகும். அசிடிட்டி போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

​குளிர்ச்சியான உணவுகள்

அசைவ உணவுகளும் எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளும் சாப்பிட்ட பிறகு கட்டாயம் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடக் கூடாது. நிறைய பேர் அசைவம் சாப்பிட்ட பிறகு, குளிர்ச்சியாக கூல் டிரிங்கஸ் அல்லது ஐஸ் க்ரீம் சாப்பிடுவார்கள். அது மிக மிக தவறு.

Read More : ’அவரு வடிவேலு இல்ல குடிவேலு’..!! பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!!

Tags :
Advertisement