முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

NTK Seeman | நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ’நீயா நானா’ பிரபலம்..!! யார் இந்த சந்திர பிரபா..?

05:56 PM Feb 24, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நாம் தமிழர் கட்சியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவர், நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து பிரபலமான மருத்துவர் ஆவார்.

Advertisement

கடந்த 2010ஆம் ஆண்டு அரசியலுக்கு நுழைந்த சீமான், நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆனார். முதன்முறையாக 2016ஆம் ஆண்டு தேர்தலில் நுழைந்தார். பின்னர், 2016 சட்டமன்ற தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.

தற்போது மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், 31 தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார். விரைவில் ஒரே மேடையில் 40 மக்களவை தொகுதி வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளார். அதன்படி, ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சந்திர பிரபா எம்.பி.பி.எஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மருத்துவர் ஆவார்.

இவர் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூலம் ஏற்கனவே பிரபலம் ஆனவர். அந்த நிகழ்ச்சியில் விவாகரத்தான பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. அப்போது விவாகரத்தான பெண்கள் பக்கம் கலந்து கொண்டு பேசினார். இவர், அப்போது பெண்கள் சுயமாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் எதிர்தரப்பில் பேசிய ஒருவர், "நாங்கள் விதவை பெண்களை கூட ஏற்றுக் கொள்வோம். விவாகரத்து பெண்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்கள் சிறிய சண்டையை கூட பெரிதாக்கிவிடுவார்கள்" என்றார்.

அதற்கு பதிலளித்த சந்திர பிரபா, "நீங்கள் பேசுறது கொஞ்சம் கூட புரியவில்லை. உங்களது சுயபுத்தி எங்க போயிருக்கு. பிரச்சனை வந்தவர்களுக்கு இந்த சமூகம் என்ன செய்தது" என்று கேள்வி கேட்டார். அதற்கு எதிர்தரப்பினர் யாரும் வாய் திறக்கவில்லை. இதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சமையல் கட்டை ஆளும் பெண்கள் Vs சமையல் செய்ய பிடிக்காத பெண்கள் என்ற தலைப்பில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

Read More : Annamalai | விஜயதரணியின் வருகை தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும்..!! குஷியில் அண்ணாமலை..!!

Advertisement
Next Article