For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அமைச்சர் வீட்டருகே NTK நிர்வாகி படுகொலை..!! பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எங்கே..? அடுக்கடுக்கான கேள்விகள்..!!

In Madurai, a Naam Tamil Party executive was chased to death while walking near the minister's house.
10:13 AM Jul 16, 2024 IST | Chella
அமைச்சர் வீட்டருகே ntk நிர்வாகி படுகொலை     பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எங்கே    அடுக்கடுக்கான கேள்விகள்
Advertisement

மதுரையில் அமைச்சரின் வீட்டருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகே சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் வீடு அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில், இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், அமைச்சர் வீட்டு அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் விரட்டியுள்ளனர். அப்போது 'காப்பாற்றுங்கள்' எனக்கூறி பாலசுப்பிரமணியன் கூச்சலிட்டபடி ஓடிய நிலையில், மர்ம கும்பலானது திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயத்துடன் கிடந்த பாலசுப்பிரமணியரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையிலும் அமைச்சர் வீட்டில் முன்பாக பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த நிலையிலும் நடைபயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பாலசுப்ரமணியன் மீது சில குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Read More : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி..!!

Tags :
Advertisement