For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனி வாட்ஸ் அப் போதும்!… கேஸ் சிலிண்டர் புக் பண்றது ரொம்ப ஈஸி!… எப்படி தெரியுமா?

07:51 AM Nov 02, 2023 IST | 1newsnationuser3
இனி வாட்ஸ் அப் போதும் … கேஸ் சிலிண்டர் புக் பண்றது ரொம்ப ஈஸி … எப்படி தெரியுமா
Advertisement

சிலிண்டர் காலியாகும் பட்சத்தில் ஆன்லைன் மூலமாகவே எப்படி சிலிண்டரை புக் செய்வது என்பதற்கான முழு விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்த நிலையில் பலரும் ஆடம்பர தேவைகள் முதல் அடிப்படை சேவைகள் வரை தங்களின் மொபைல் மூலமாகவே செய்ய முடியும். இருப்பினும், உங்கள் மொபைல் போன் கால், SMS, ஆன்லைன்,மொபைல் ஆப், வாட்டஸ்அப் பல வழிகள் எளிமையான முறையில் வந்துவிட்டாலும்கூட, சிலருக்கு எப்படி கேஸ் புக்கிங் செய்வது என்று தெரியவில்லை. அது எப்படி எனக் காணாலாம்.

இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கேஸ் சிலிண்டர் காலியாகும் போது ஆன்லைன் மூலமாக எளிதில் புக் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், மொபைலை மற்றும் வாட்ஸ் அப் மூலமாக கேஸ் சிலிண்டர் எப்படி புக் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

அதன்படி Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கு Book அல்லது Refill என டைப் செய்து மெசேஜ் அனுப்பியதும் உங்களுக்கு எந்த தேதியில் கேஸ் டெலிவரி செய்யப்படும் என்ற விவரம் அனுப்பப்படும். அடுத்து HP கேஸ் வாடிக்கையாளர்கள் 92222 01122 என்ற எண்ணுக்கும், Bharat Petroleum சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 1800224344 என்ற எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி சிலிண்டரை புக் செய்யலாம். மேலும் Paytm, PhonePay, Google pay மூலமாகவும் புக் செய்யலாம்.

Tags :
Advertisement