முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி வெஸ்டர்ன் டாய்லெட்டை இப்படி பயன்படுத்துங்கள்..!! சில டிப்ஸ் உங்களுக்காக..!!

Not everyone needs to know how to use a western toilet.
04:58 PM Oct 14, 2024 IST | Chella
Advertisement

எல்லோருக்கும் வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும், பொது இடங்களில் அல்லது கார்ப்பரேட் சூழ் உலகில் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. எங்கும் நாம் வாழ்வதற்கான தேவைகளை கற்றுக்கொள்வதுதான் நம்மை நல்ல சர்வைவராக மாற்றும். எனவே, வெஸ்டர்ன் டாய்லெட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்னும் முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

Advertisement

வெஸ்டர்ன் டாய்லெட் அறை எப்படி இருக்கும்..?

இந்தியன் டாய்லெட் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதுதான் வெஸ்டர்ன் டாய்லெட். இதில் நாம் நாற்காலியில் அமர்வதுபோல் உட்கார்ந்தே இயற்கை உபாதைகளைக் கழிக்கலாம். இது முதியவர்களுக்கு மிகவும் வசதியானது. இதில் நீங்கள் தனியாக தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. இதன் சிங்க் தண்ணீர் நிரப்பிய தொட்டியுடனே இருக்கும். அந்த தொட்டியின் மேல் உள்ள பட்டனை அழுத்தினால் போதும் கழிவுகளை நீக்கிவிடும்.

டாய்லெட் சீட் இடதுபுறம் பேப்பர் ரோல் இருக்கும். இதை நீங்கள் அமரும் டாய்லெட் சீட் மீது இருக்கும் ஈரத்தை துடைத்து எடுக்க அல்லது கறைகள் இருப்பின் சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். கைகளை துடைத்துக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் அருகே குப்பைத் தொட்டியும் வைக்கப்பட்டிருக்கும். டாய்லெட் சீட்டின் வலது புறம் குழாயில் கழுவுவதற்காக பைப் இருக்கும். அதை பயன்படுத்தி கழுவிக் கொள்ளலாம்.

வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் முறை :

* நீங்கள் வெஸ்டர்ன் டாய்லெட்டின் சீட் மீது நேரடியாக நாற்காலியில் அமர்வதுபோல் அமர்ந்து கொள்ளலாம். அதன் மீது ஏறியெல்லாம் உட்காரக்கூடாது.

* அமர்வதற்கு முன் சீட்டை சுற்றியுள்ள ஈரத்தை துடைக்க வேண்டும். ஈரம் இல்லாவிட்டாலும் சுற்றிலும் துடைத்துவிட்டு அமர்வது நல்லது.

* அமரும் முன் ஒரு முறை ஃபிளஷ் செய்வதும் நல்லது. சிங்க்கை சுற்றிலும் அழுக்கு இருப்பின் நீங்கிவிடும்.

* பொதுக்கழிப்பிடமாக இருப்பின் கட்டாயம் ஃபிளஷ் செய்ய வேண்டும். இதனால், தொற்று வருவதை தவிர்க்கலாம்.

* கழிவறை சென்று வந்தபின் கை கழுவும் சிங்கில் கை கழுவிக் கொள்ள வேண்டும். பின் டிஷ்யூ பேப்பர் கொண்டு ஈரத்தை துடைத்துக் கொள்ளலாம்.

கழிவை வெளியேற்றியபின் எப்படி கழுவ வேண்டும்?

கழிப்பறை இருக்கைக்கு வலது புறத்தில் கழுவுவதற்கான ஸ்பிரே கொண்ட பைப் இருக்கும். அது சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும். அதன் வால்வை அழுத்திப் பிடித்தால் தண்ணீர் பாய்ச்சி அடிக்கும். பின் டாய்லெட் பேப்பரை பயன்படுத்தி ஈரத்தை துடைத்து எடுக்கலாம். கழிவறையை விட்டு வெளியேறும் முன் சீட்டை சுற்றிலும் உள்ள ஈரத்தையும் துடைத்து காகிதத்தை குப்பை தொட்டியில் போடுங்கள். இதனால் உங்களுக்கு பின் வருவோர் முகம் சுழிக்காமல் இருக்க உதவியாக இருக்கும்.

Read More : நீங்களும் உயில் எழுதி வைக்கப் போறீங்களா..? அப்படினா கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
Western toiletஅலுவலகம்பொதுக்கழிப்பிடம்
Advertisement
Next Article