For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பண மழை கொட்டப்போகும் ராசிக்காரர்கள்..!! இனி ராஜயோகம் தான்..!! இத்தனை நன்மைகளா..?

Mercury is considered as the prince of planets in the solar system. Many zodiac signs will benefit from the transit of Mercury. It is said that 16 days from today will be auspicious for these 5 zodiac signs. You can see about it in this post.
05:40 AM Jun 19, 2024 IST | Chella
பண மழை கொட்டப்போகும் ராசிக்காரர்கள்     இனி ராஜயோகம் தான்     இத்தனை நன்மைகளா
Advertisement

சூரிய குடும்பத்தில் புதன் தான் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறது. புதனின் மாற்றத்தால் ஏராளமான ராசிகள் நன்மையே பெறுவார்கள். இந்த 5 ராசிக்காரர்களுக்கு 16 நாட்கள் மங்களகரமானதாக அமையும் என சொல்லப்படுகிறது. அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

மேஷம் : புதன் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். புதனின் சுப செல்வாக்கால் தொழிலில் புதிய உயரங்களை அடைய முடியும். இந்த 16 நாட்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும். வியாபாரம், தொழிலில் புதிய ஆர்டர்கள் குவியலாம்.

மிதுனம் : இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் இருந்தால், நல்ல பலனை அளிக்கும். இந்த 16 நாட்கள் உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். இதில், நீங்கள் அதிக லாபம் ஈட்டுவீர்கள். மேலும், நிதி நிலை முன்பை விட சீராக இருக்கும்.

கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம், புகழ், பெருமையை கூட்டும். நீங்கள் இனி உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை சந்திப்பீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாகவும், அமைதியானதாவும் இருக்கும்.

துலாம் : துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் வரும். இதன் மூலம் உங்கள் வருமானம் முன்பை விட அதிகமாக இருக்கும்.

தனுசு : புதனின் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த பலனை கொடுக்கும். இந்நேரத்தில் நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தம் அல்லது முதலீட்டை பெறுவீர்கள். இது உங்கள் வணிக வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

பொறுப்பு துறப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் வெளியான நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டவை.

Read More : வீட்டில் பணம் சேர வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த பூஜையை செய்து பாருங்க..!! மனம் குளிரும் மகாலட்சுமி..!!

Tags :
Advertisement