தூங்கும்போது இந்த தவறை செய்தால் மாரடைப்பு, சர்க்கரை நோய் வரும்..!! அதை தவிர்க்க இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. நிபுணர்களின் கூற்றுப்படி, 9 மணி நேரத்திற்கும் மேல் தூங்குவோருக்கு மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் எந்த காரணத்தினாலும் மரணம் ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர். அதேபோல் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு உயரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன் அல்லது சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாம். அப்படியென்றால், எத்தனை மணி நேரம் தான் தூங்குவது..? என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு நபர் தினமும் சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். இருப்பினும், ஒவ்வொரு நபரின் வாழ்க்கை முறை மற்றும் வயது போன்றவற்றின் அடிப்படையில் இது அதிகரிக்கும் அல்லது குறையும். தற்போது, எந்த வயதில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
9 மாத குழந்தை - 14 முதல் 17 மணி நேரம் தூங்கலாம்.
2 வயது குழந்தை - 11 மணி முதல் 16 மணி நேரம் தூங்கலாம்.
3 முதல் 5 வயது குழந்தை - 10 முதல் 13 மணி நேரம் தூங்கலாம்.
6 முதல் 13 வயது குழந்தை - 9 முதல் 12 மணி வரை தூங்கலாம்.
14 முதல் 17 வரை உள்ளவர்கள் - 8 முதல் 10 மணி நேரம் வரை தூங்கலாம்.
18 முதல் 64 வயது உள்ளவர்கள் - 7 முதல் 9 மணி நேரம் தூங்கலாம்.
65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் - 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கலாம்.
Read More : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! சவரனுக்கு எவ்வளவு உயர்வு..?