For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இனி தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்’..!! தவெக தலைவர் விஜய்..!!

'I see the flag of Tamil Nadu Victory Association not just as a party flag, but as a victory flag for future generations,' said Vijay.
11:33 AM Aug 22, 2024 IST | Chella
’இனி தமிழ்நாட்டுக்காகவும்  தமிழக மக்களுக்காகவும் உழைப்போம்’     தவெக தலைவர் விஜய்
Advertisement

'தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வெறும் கட்சிக் கொடியாக மட்டுமின்றி, வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக நான் பார்க்கிறேன்' என்று விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்து பேசிய தலைவர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாலும் சரி, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முன்னாலும் சரி இந்த கொடியை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் உழைப்போம். நம் கொடிக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது.

நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கும் அந்த நாளில், நம்முடைய கொள்கைகள், செயல்திட்டங்களுடன் இந்த கொடிக்கான விளக்கமும் சொல்லப்படும். அதுவரைக்கும் சந்தோசமா, மாஸா, கெத்தா நம்ம கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம். இது வெறும் கட்சிக் கொடி மட்டுமல்ல. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடி. நான் சொல்லாமலேயே இந்த கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நீங்கள் ஏற்றுவீர்கள் என்று எனக்கு தெரியும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்தார்.

கட்சிக் கொடிக்கான அர்த்தம் என்ன..?

கொடி அர்த்தம் குறித்து, சங்க காலத்தில் மன்னர்கள் பயன்படுத்தி வந்தமையால், அதோடு தொடர்பு படுத்தி வைத்து பார்க்கையில், ‘சங்ககாலத்தில் இருந்து தமிழ் நிலத்தில் வாகை மலர் இருந்து வருகிறது. போர் புரிபவர்கள் வெற்றியின் அடையாளமாக வாகை மலரை சூடி வருவார்கள். வாகை மலர் வெற்றியின் குறியீடு.

போர் புரிய சென்ற தலைவன் திரும்பி வரும்போது கழுத்தில் அணிந்து வரும் மலர் மாலையை கொண்டே போரின் நிலையை அறிவார்கள். வாகை மலர் அணிந்து வந்தால் வெற்றி பெற்றவர் என கருதப்படுவர். ஆனால், அதற்கான அர்த்தத்தை மாநாட்டில் கூறுகிறேன் என விஜய் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநாட்டில் கட்சியின் கொள்கை மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : தவெக கட்சிக் கொடியின் அர்த்தம் என்ன தெரியுமா..? இவ்வளவு பெரிய வரலாறே இருக்கா..?

Tags :
Advertisement