For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனி மொபைல் செயலி மூலம் மின் கணக்கெடுப்பு!! - மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு

08:11 AM Jul 11, 2024 IST | Mari Thangam
இனி மொபைல் செயலி மூலம் மின் கணக்கெடுப்பு      மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு
Advertisement

மின்சார வாரியமான tangedco வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி, தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற 'கட்டிட நிறைவு சான்றிதழ்' தேவை இல்லை.

Advertisement

14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடுகளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்ககளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை. அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. பல முக்கியமான அறிவிப்புகள் தினம் தினம் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு சிறப்பான திட்டத்தை வகுத்து வருகிறார். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. EY என்பது உத்தரவாதம், ஆலோசனை, உத்தி மற்றும் பரிவர்த்தனைகள் மற்றும் வரி சேவைகள் ஆகியவற்றில் உலகளாவியளவில் முன்னணியில் உள்ளது. இவர்கள் வழங்கும் நுண்ணறிவு மற்றும் தரமான சேவைகள் மூலதனச் சந்தைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் மீது நம்பிக்கையையும் வளர்க்க உதவுகின்றன.

மேலும் இந்நிறுவனம் தமிழகத்தில் 50க்கும் மேற்ப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்நிறுவனம் பொதுத்துறைகளின் ஆண்டறிக்கை, இடைக்கால பொருளாதார அறிக்கை மற்றும் நடப்பு வருமான குறிப்புகள். போன்றவற்றை ஆய்வு செய்கின்றன. இந்நிலையில் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளனர். இச்செயலி மின்களப்பயணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இச்செயலியின் மூலம் மின்பயன்பாடு கணக்கெடுப்பு மற்றும் கணக்கெடுக்காதவை போன்றவைகளின் விவரங்களை அறிய முடியும். மேலும் மின்கட்டணம் செலுத்திய இணைப்புகள் மற்றும் செலுத்தாத இணைப்புகள் பற்றிய விவரங்களை அறிய முடியும். மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் மின்பளு குறைபாடு போன்றவற்றை அறியமுடியும். மற்றும் மின்சார சேவை தொடர்பான புகார்களையும் ஆய்வு செய்ய முடியும்.

Tags :
Advertisement