For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

4 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு..! 10 மணிநேரத்தில் 39.4 செ.மீ. மழை பதிவு..! சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்..!

09:18 PM Dec 17, 2023 IST | 1Newsnation_Admin
4 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு    10 மணிநேரத்தில் 39 4 செ மீ  மழை பதிவு    சிறப்பு ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமனம்
Advertisement

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது, குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்து வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருநெல்வேயில் இன்று இரவும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை, வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரிக்கு சு.நாகராஜன், நில நிர்வாக ஆணையரம், திருநெல்வேலிக்கு இரா.செல்வராஜ், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அவர்களும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு பா.ஜோதி நிர்மலா, அரசு செயலாளர், வணிகவரித் துறை அவர்களும், தென்காசி மாவட்டத்திற்கு சுன்சோங்கம் ஜதக் சிரு, அரசு செயலாளர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அவர்களும் நியமிக்கப்ட்டுள்ளனர். மேலும் அவசர உதவிஎண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் -1070, மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் - 1077, வாட்ஸ் அப் எண். - 94458 69848.

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவரும் நிலையில், காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலான மழைப்பொழிவின் அளவை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 39.4 செ.மீ மழையும் சாத்தான்குளத்தில் 30.6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 10 மணிநேரத்தில் 39.4 செ.மீ. மழை பதிவாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement