நோட்!. இன்றுமுதல் அமலாகும் புதிய விதிகள்!. சிலிண்டர் முதல் ஐடிஆர் வரை!. முழுவிவரம்!
New rules: இன்றுமுதல் (ஜூலை 1) பல்வேறு அரசு சேவைகளின் செயல்பாட்டில் மாற்றங்களைக் கொண்டுவரப்படும். அந்தவகையில் ஒவ்வொரு புதிய மாத தொடக்கத்தில், பல துறைகளுக்கான விதிகள் மாறும். அனைத்து துறைகளிலும் ஒரே சீரான தன்மையை பராமரிக்க புதிய மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மாற்றங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்தவகையில் இன்று தொடங்கியுள்ள ஜூலை மாதத்தில், எல்பிஜி சிலிண்டர், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலை அதிகரிக்கலாம்.
ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் ஆகியவை தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை ஏற்கனவே உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் அமலுக்கு வரும். நீங்கள் சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த மாத இறுதிக்குள் அதைச் செய்ய வாய்ப்பு. இதைத் தவிர ரிசர்வ் வங்கி புதிய விதிகள் கிரெடிட் கார்டு விதிகளையும் அமல்படுத்துகிறது.
எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஜூன் 1ம் தேதி வணிக ரீயிலான சிலிண்டர் விலையை அரசு குறைத்திருந்தது. இந்த முறை அரசாங்கம் விலையை கூட்டுமா அல்லது குறைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது தவிர, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
ஜூலை 1 முதல் இ-வாலட்கள் முதல் கிரெடிட் கார்டுகள் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை பண விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அந்தவகையில், Paytm Payments Bank வாலட்கள் ஜூலை 20ம் தேதி முதல் செயலற்றதாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இந்த காலாவதியானது, ஜீரோ பேலன்ஸ் வாலெட்டுகளுக்கும் ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக எந்த பரிவர்த்தனைகளையும் செய்யாதவற்றுக்கும் பொருந்தும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய விதிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் காரணமாக கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் சில மாற்றங்கள் இருக்கும். அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS) மூலம் செலுத்தப்பட வேண்டிய இந்த உத்தரவு, PhonePe, Cred, BillDesk மற்றும் Infibeam Avenues போன்ற முக்கிய ஃபின்டெக் தளங்களை பாதிக்கும்.
ஜூலை 1 முதல், அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களையும் BBPS மூலம் செய்ய வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இதுவரை, கிரெடிட் கார்டுகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட 34 வங்கிகளில் எட்டு வங்கிகள் மட்டுமே BBPS மூலம் கட்டணம் செலுத்தும் முறையை செயல்படுத்தியுள்ளன.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்கள் ஜூலை 3 முதல் அதிகரிக்கின்றன . புதிய ரீசார்ஜ் திட்டங்களின் கட்டண பட்டியலை நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அனைத்து நிறுவனங்களும் 20 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளன.
ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டின் மாறுபாடுகளுடன் வழங்கப்படும் லவுஞ்ச் அணுகலுக்கான விதிகளை PNB திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். PNB ஒரு காலாண்டுக்கு 1 உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல்/ரயில்வே லவுஞ்ச் அணுகலை வழங்கும். இது ஆண்டு அடிப்படையில் 2 சர்வதேச விமான நிலைய லவுஞ்ச் அணுகலை வழங்கும் என்று ET தெரிவித்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல்: வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 ஆகும். இந்தக் காலக்கெடுவிற்கு முன் வரிகளைத் தாக்கல் செய்தால், தாமதமாகச் செலுத்தும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. ஜூலை 31க்குப் பிறகும், டிசம்பர் 31, 2024க்கு முன்பும் தாக்கல் செய்யப்படும் ஐடிஆர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் டிசம்பர் 31, 2024க்குப் பிறகு ரூ. 10,000 ஆக உயரும். தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு மாதத்துக்கு 1 சதவீதம் வட்டி விதிக்கப்படும்.
Readmore: “நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன்..!!” – ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!