நோட்!. நாளை முதல் எல்லாம் மாறப்போகுது!. சிலிண்டர், பெட்ரோல், கிரடிட் கார்டு, யுபிஐ-களில் புதிய மாற்றம்!. முழுவிபரம்!
Changes: ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு சில விதிகளில் மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முடியவுள்ள நிலையில் நாளை (செப்டம்பர் 1 ஆம் தேதி) முதல் ஒரு சில மாற்றங்களை காண போகிறோம். இதில் எல்பிஜி கேஸ் சிலிண்டர், கிரெடிட் கார்டும் இடம் பெறும். அது போல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பான சிறப்பு அறிவிப்புகள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அந்த மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இலவச ஆதார் புதுப்பிப்பு காலத்தை செப்டம்பர் 14, 2024 வரை நீட்டித்துள்ளது, இது மக்கள்தொகை தகவலைப் புதுப்பிக்க கூடுதல் நேரத்தை வழங்குகிறது. அதைப் புதுப்பிக்க, சரியான அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்கள் UIDAI போர்ட்டலில் பதிவேற்றப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை அரசு மாற்றி வருகிறது. வணிக எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு விலையில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அது போல் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியும் சிலிண்டர் விலையில் மாற்றம் வரும். அது போல் இரண்டாவது மாற்றமாக விமான எரிபொருளின் விலைகளையும் மாற்றியமைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
போலி அழைப்புகள், போலி செய்திகள் கட்டுப்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடுமையான வழிகாட்டுதலை டிராய் வெளியிட்டுள்ளது. அதன் படி பிளாக் செயின் தொழில்நுட்பத்தை கொண்டு 140 என தொடங்கும் மொபைல் எண்களுக்கான டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், வணிக செய்திகளை அனுப்ப ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் எச்டிஎஃப்சி வங்கி பயன்பாட்டு பரிவர்த்தனைகளுக்கான வெகுமதி புள்ளிகளின் வரம்பை நிர்ணயிக்க உள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் இந்த பரிவர்த்தனைகளில் மாதத்திற்கு 2000 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும். ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிறகு ஆதார் தொடர்பான சில விஷயங்களை இலவசமாகப் புதுப்பிக்க முடியாது. செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு, ஆதாரை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். முன்பு ஜூன் 14 ஆம் தேதி வரை புதுப்பிக்கும் கட்டணம் இருந்த நிலையில் அது செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. எனவே 3 சதவீதம் உயர்த்தினால் அது 53 சதவீதமாக உயரும்.
Readmore: CBSE vs ICSE!. எது சிறந்தது?. தேர்வு செய்யும்போது என்ன கருத்தில் கொள்ள வேண்டும்?