ஒயிட் போர்டு மட்டுமல்ல.. இனி நீல நிற சொகுசு பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணம்..!!
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ‘ஒயிட் போர்டு’ பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். அரசுப் போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் 9,000 மாநகரப் பேருந்துகளில் 7,300-க்கும் மேற்பட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 1,559 வழக்கமான கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
இதனால், அரசு பஸ்களில் பெண் பயணியர் எண்ணிக்கை, 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சென்னையில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள நீல நிற சொகுசு பஸ்களிலும், இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, "சாதாரண கட்டண பஸ்களில், பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மாநகரப் போக்குவரத்து கழகத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள நீல நிறத்தில் இருக்கும், 130 புதிய சொகுசுபஸ்களிலும், பெண்கள் இலவச பயண திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை போல, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களிலும், நீல நிற டவுன் பஸ்களில் கணிசமான அளவுக்கு, 'மகளிர் விடியல் பயண பஸ்கள்' இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சிவப்பு நிற சொகுசு மற்றும், 'ஏசி' வகை பஸ்களில், பெண்கள் இலவச பயண திட்டம்விரிவுப்படுத்தப்பட வில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Read more ; BJP vs Congress : பழங்குடியினர்களுக்கு எதிரானதா பாஜக? ராகுலின் பேச்சுக்கு வலுக்கும் விவாதம்..