”நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை”..!! பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு..!!
தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் சட்டசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரே நேரத்தில் அதிகரிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது. இன்றைக்கு ஒரு எம்.பி., 20 லட்சம் பேரை பார்க்க முடியாது, சேவை செய்ய முடியாது. ஒரு எம்எல்ஏவுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட தொகுதியாக ஒதுக்கப்படுகிறது. அவர்களாலும் பணி செய்ய முடியவில்லை.
இதனால் அரசு ஸ்தம்பித்து நிற்கிறது. எனவே, உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். 2026ஆம் ஆண்டுக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றே ஆக வேண்டும். அதை தவிர்க்க முடியாது. சட்டசபையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானங்களை யோசனை இல்லாமல் முதல்வர் முக.ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.