காலையில் பல் துலக்காமல் இருப்பது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் - மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!
ஒருவர் பற்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார் என்பதற்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. பல் துலக்காமல் இருப்பது வாய் ஆரோக்கியத்தை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என சமீபத்தில் பல் மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதனால் இதயநோய், நீரிழிவு நோய், புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள fred hutchinson புற்றுநோய் மையத்தின் ஆராய்சியாளர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். 200 குடல் புற்றுநோய் கட்டிகளை ஆராய்ச்சி செய்ததில் பாதி கட்டிகளில் நுண்ணுயிரி இருப்பதை கண்டறிந்தனர். மேலும் பற்களை கவனிக்காமல் இருப்பது மற்ற உறுப்புகளை நோயுற செய்வது போன்ற எதிர்பாராத பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தனர்.
மேலும், சில வகையான பாக்டீரியாக்கள் வாயில் இருப்பது இயல்பு என்றாலும், தினமும் துலக்குவதன் மூலம் சுத்தம் செய்யாவிட்டால், அவை பெருங்குடலை அடைந்து புற்று நோய் அபாயத்தை அதிகரிக்கும். வழக்கமான பல் பரிசோதனைக்கு செல்வதன் மூலம் பற்களில் வரும் பிரச்னைகளை குறைக்கலாம் என்கின்றனர் ஆராய்சியாளர்கள்.