மக்களே சமைக்கும்போது உஷார்..!! உயிரைப் பறிக்கும் அபாயம்..!! எச்சரிக்கும் ICMR..!!
இன்று உலகளவில் ’நான் ஸ்டிக்’ பாத்திரங்கள் இல்லாத சமையலறைகளே இருக்க முடியாது. ஏனென்றால், அந்த வகையான பாத்திரங்கள் அடி பிடிக்காது மற்றும் விரைவில் சமைத்து முடிக்கலாம். குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், நான் ஸ்டிக் பாத்திரங்களில் இருக்கும் வழவழப்புத் தன்மைக்காக polytetrafluoroethylene (PTFE) என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. எனவே, 2013ஆண்டு அந்த கெமிக்கல் அல்லாமலேயே நான் ஸ்டிக் பாத்திரங்கள் தயாரிக்கப்பட்டன. எனவே, இன்றைய நவீன நான் ஸ்டிக் பாத்திரங்கள் ஆபத்து இல்லாதவை என்று கூறப்படுகிறது. ஆனால், அதை பயன்படுத்தும் முறையைப் பொருத்தே உள்ளது.
நான்-ஸ்டிக் குக்வேர் பொதுவாக டெஃப்ளான் என்ற கெமிக்கல் பூச்சுடன் பூசப்பட்டிருக்கும். இது கார்பன் மற்றும் ஃப்ளோரின் அணுக்களால் ஆன ஒரு செயற்கை ரசாயனம். சாதாரண வெப்பநிலையில், அவற்றில் சமைப்பது நல்லது. ஆனால், அதிக வெப்பநிலையில் சமைத்தால் அந்த பூச்சு நச்சுகள் அல்லது நச்சுப் புகைகளை உருவாக்கலாம். இதன் மூலம் உங்கள் உணவில் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் கலப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நான் ஸ்டிக் குக்வேர்களைப் பயன்படுத்தும் போது அதில் இருந்து நச்சுகளின் வெளிப்பாட்டைத் தவிர்க்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சில வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் பல்வேறு வயதினருக்கான 17 புதிய உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்தியர்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுப்பதற்கும் ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்ய உதவுவதற்கு ஆதார அடிப்படையிலான பரிந்துரைகளை வழங்குவதை வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
அந்த வகையில், டெஃப்ளான் பூசப்பட்ட நான்-ஸ்டிக் பான்கள் 170 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சூடேற்றப்பட்டால் ஆபத்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் பாத்திரத்தை அடுப்பில் நீண்ட நேரம் வைத்திருந்தால் இது நிகழலாம். மேலும், பூச்சு தேய்ந்துவிட்டால் அல்லது சேதமடையும் போது அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் ஸ்டிக் பாத்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்..?
வெற்று பாத்திரத்தை முன்கூட்டியே சூடாக்க கூடாது. அது மிக வேகமாக வெப்பமடையும் மற்றும் இது நச்சுப் புகைகளை வெளியிடும். குறைந்த மற்றும் மிதமான தீயில் சமைப்பது நல்லது. நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கும் போது புகைபோக்கி அல்லது வெளியேற்ற விசிறியைப் பயன்படுத்தலாம். மேலும் மென்மையான சோப்பு, வெதுவெதுப்பான நீரில் மெதுவாக கழுவ வேண்டும். பூச்சு மோசமடையும் போது சமையல் பாத்திரங்களை மாற்றிவிடுவது நல்லது. துருப்பிடிக்காத எஃகு, வார்ப்பிரும்பு, கல் மற்றும் பீங்கான் சமையல் பாத்திரங்களில் சமைப்பது மிகவும் நல்லது.
Read More : BREAKING | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..!! அதிமுக போட்டியிடாது..!! எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு..!!