முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’தமிழ்நாட்டில் அந்த வார்த்தையை யாரும் பயன்படுத்தக் கூடாது’..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி..!!

07:27 AM Dec 28, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கைதிகளை, தற்காலிகமாக உரிய காரணத்தின் அடிப்படையில் சில காலம் விடுவித்தல் 'பரோல்’ எனப்படும். தண்டனைக் கைதிகள் தங்களுக்கு விடுமுறை கோரி விண்ணப்பிப்பார்கள். தீவிர நோய்வாய்ப்படுதலால் அவசர சிகிச்சை பெறுதல், குடும்ப உறுப்பினர் இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சாதாரண, அவசர கால விடுப்பு கோரி விண்ணப்பிப்பார்கள். இந்த விடுப்புக்கு சிறை அதிகாரிகள் அனுமதி தருவார்கள்.

Advertisement

அந்த விடுப்பை சிறை அதிகாரி எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். ஒருவேளை விடுமுறை தர மறுத்து விட்டால், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள். நீதிமன்றம், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களை ஆராய்ந்து மனிதாபிமான அடிப்படையில் பரோல் வழங்க உத்தரவிடும், அல்லது மறுக்கும். இந்நிலையில் மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி உள்ளிட்ட சிறைகளில் உள்ள தண்டனை கைதிகள் உயர்நீதிமன்ற கிளையில் விடுப்பு கேட்டு பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”பரோல் என்ற சொல் தமிழ்நாட்டில் நீதிமன்ற நடைமுறையில் இல்லை. தண்டனை கைதிகள் தங்களுக்கு விடுப்பு கேட்கும்போது, பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடுகின்றனர். பரோல் என்ற வார்த்தையை அடிக்கடி மனுவில் குறிப்பிடுகின்றனர். ஆனால், உண்மையில் தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு விதிகளின் படி பரோல் என்ற வார்த்தையும், பரோல் தொடர்புடைய விதிமுறைகளும் தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படவில்லை.

மற்ற மாநிலங்களில் உள்ள விதிகளில் தான் பரோல் என்ற வார்த்தை உள்ளது. பரோலுக்கு என தனி வழிமுறைகள் உள்ளன. எனவே, தமிழக தண்டனை நிறுத்திப்புச் சட்டத்தின் படி பரோல் என்ற வார்த்தை பயன்படுத்த கூடாது. தமிழ்நாட்டில் தண்டனை கைதிகள், பரோல் வழங்க வேண்டும் என விடுமுறை கோர முடியாது. இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின்படி கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசரகால விடுப்பு என்ற இரண்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் தண்டனை கைதிகள் மனு தாக்கல் செய்யும்போது பரோல் அடிப்படையில் விடுமுறை வேண்டும் எனக் கோரக்கூடாது என அறிவுறுத்தினர்.

Tags :
உயர்நீதிமன்ற கிளைசிறை தண்டனைநீதிபதிகள்பரோல்
Advertisement
Next Article