For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தென்கொரிய பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

Nobel Prize for Literature for South Korean female poet!
06:00 AM Oct 11, 2024 IST | Kokila
தென்கொரிய பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
Advertisement

Nobel Prize: மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அந்த வரிசையில் நேற்று (அக்.10) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று உண்மைகள் மற்றும் மனித வாழ்வின் பலவீனத்தை வெளிப்படுத்தும் 'தீவிர கவிதை உரைநடை' படைப்புக்காக தென்கொரிய பெண் கவிஞரான ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

53 வயதான ஹான், The Vegetarian என்ற தமது நாவலுக்காக 2016 ஆம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசை வென்றார். ஒரு பெண் இறைச்சி உண்பதை நிறுத்துவதென முடிவு செய்த பின் ஏற்படும் விளைவுகளை இப்படைப்பு விவரித்தது. Human Acts என்ற இவரது மற்றொரு நாவல், 2018 ஆம் ஆண்டு புக்கர் விருதுக்கான இறுதிச்சுற்று வரை சென்றது.

17 பெண்கள் உட்பட்ட மொத்தம் 119 பேருக்கு இதுவரை இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக 2022 இல் பிரான்சை சேர்ந்த பெண் எழுததாளரான அன்னி எர்னாக்ஸ் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 ஆம் தேதி, நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: ஆதார் அட்டையை வைத்து ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாமா..? எப்படி தெரியுமா..?

Tags :
Advertisement