ஒரு வருஷத்துக்கு ரீசார்ஜ் பண்ண வேண்டாம்.. அன்லிமிடட் கால், தினமும் 2 ஜிபி டேட்டா.. BSNL-ன் மலிவான திட்டம்..
தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சலுகைகளை போட்டி போட்டு வழங்கி வருகின்றன. அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க, இந்த நிறுவனங்கள் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. எனினும் அவ்வப்போது இந்த நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையையும் உயர்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் VI ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. இந்த விலை உயர்வுக்கு பிறகு, பல வாடிக்கையாளர்கள் சந்தையில் மலிவான திட்டங்களை வழங்கும் BSNL நிறுவனத்திற்கு மாறிவருகின்றனர்.
தற்போது தனது பயனர் தளத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வரும் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பயனர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், BSNL பல ஆண்டுகள் செல்லுபடியாகும் சில திட்டங்களையும் சேர்த்துள்ளது. தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களின் விலை அதிகரித்த பிறகு, ஜியோ, ஏர்டெல் மற்றும் VI-ன் வாடிக்கையாளர்கள் BSNLக்கு மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதத்தில், BSNL 2.9 மில்லியன் புதிய பயனர்களை சேர்த்தது. வழக்கமான மாதாந்திர ரீசார்ஜ் செய்யும் முறையில் இருந்து தப்பிக்க விரும்பும் பயனர்களுக்கு மற்றொரு குட்நியூஸ் உள்ளது. ஆம். BSNL ஒரு சிறந்த வருடாந்திர திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்து, BSNL பலவிதமான திட்டங்களை உங்களுக்கு வழங்குகிறது. ரூ.100 முதல் ரூ.3000 வரை என பல விலைகளில் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கின்றன. குறிப்பாக மாதம் மாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ரீசார்ஜ் செய்யும் வகையில் பல அசத்தல் திட்டங்களை வழங்கி வருகிறது.
BSNL மலிவான வருடாந்திர திட்டம் : BSNL ரூ.779 என்ற விலையில் மலிவான ஆண்டு ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இது ஒரு வருட செல்லுபடியாகும் மலிவான திட்டமாகும். இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்கிற்கும் 365 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 5 ரூபாய்க்கு பல நன்மைகளை அனுபவிக்க முடியும்.
BSNL-ம் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் கட்டணமில்லா அழைப்பு மற்றும் இணைய சேவைகள் கிடைக்கின்றன, தொடக்க இரண்டு மாதங்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா உடன், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம்.. இருப்பினும், இந்த ஆரம்ப 60 நாட்களுக்குப் பிறகு, உங்களுக்கு கூடுதல் டேட்டாவை பெற விரும்பினால், மற்றொரு டேட்டா திட்டத்தை பெற வேண்டும். இந்த BSNL ரீசார்ஜ் சலுகையானது, தங்கள் சிம் கார்டை ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என்று விரும்புவோருக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற தேர்வாகும்.
BSNL-ன் மற்ற திட்டங்கள்: BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய வருடாந்திர திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் திட்டத்தின் விலை ரூ.1999. இது ஆண்டுக்கு 600ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இரண்டாவது திட்டத்திற்கு ரூ.2399 செலவாகும். இது ஒரு வருடத்திற்கு தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இரண்டு திட்டங்களிலும் முதல் மாதத்திற்கான இலவச BSNL ட்யூன்களின் போனஸ் அடங்கும். இந்த புதிய திட்டங்கள் BSNL பயனர்களுக்கான டேட்டா சலுகைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.