முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகர் விஜய்யின் அதிரடி உத்தரவு..!! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள்..!!

It has been reported that Vijay has instructed the party executives not to use the party name Tamilnadu Vetri Kazhagam.
07:10 AM Aug 08, 2024 IST | Chella
Advertisement

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சி பெயரை பயன்படுத்த வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிர்கர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது, படத்தின் புரொமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதில் தனது கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோட் திரப்படம் திரைக்கு வரவுள்ளதால், பேனர்கள், போஸ்டர்கள் ஏதேனும் வைத்தால் அதில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்கிற கட்சியின் பெயரை பதிவு செய்யக்கூடாது.

அதற்கு மாறாக 'விஜய் மக்கள் இயக்கம்' என்கிற பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டு படங்களுக்கு அரசியல் கட்சியின் பெயரை பயன்படுத்தக்கூடாது என விஜய் அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More : ’ஆபத்து நெருங்கிருச்சு’..!! ’இந்தாண்டுக்குள் தமிழ்நாட்டில் இது நடக்கும்’..!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

Tags :
cinemaTamilnadutvk vijay
Advertisement
Next Article